புளோரிடாவில் இயன் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!
Published : Sep 29, 2022 5:16 PM
புளோரிடாவில் இயன் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!
Sep 29, 2022 5:16 PM
புளோரிடாவில் இயன் சூறாவளி காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதுடன், மின்வெட்டு உள்ளிட்ட பிரச்சனைகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மோசமான சூறாவளிகளில் ஒன்றாக கருதப்படும் இயன் சூறாவளியால், மணிக்கு 241 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசிவரும் நிலையில், பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது.
புயல் குறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் காற்றின் வேகத்தில் ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறி விழுந்த காட்சிகள், குடியிருப்பு பகுதியை சூழ்ந்த வெள்ளநீரில் சுறா நீந்துவது உள்ளிட்ட இயன் சூறாவளி தொடர்பான காட்சிகள் வெளியாகியுள்ளன.