சென்னையில் குற்றவழக்கில் சாட்சிச் சொல்ல வந்த நபருக்கு நீதிமன்ற வளாகத்தில் வைத்து கொலை மிரட்டல் விடுத்த ரவுடிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
கோயம்பேட்டைச் சேர்ந்த குருநாத பாண்டியன் என்பவர் கடந்த 2011-ம் கொடுங்கையூரில் நடந்த கொலை வழக்கில் சாட்சி சொல்வதற்காக அல்லிக்குளம் நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். சாட்சி சொல்லிவிட்டு வெளியில் வந்த குருநாத பாண்டியனை இரண்டு நபர்கள் தடுத்து, “இனி எங்களுக்கு எதிராக சாட்சி சொல்ல வந்தால் கொலை செய்துவிடுவோம்” என மிரட்டியுள்ளனர்.
இது தொடர்பாக பெரியமேடு போலீசார் கொலை மிரட்டல் விடுத்த ரவுடிகள் சுரேஷ், மற்றும் மோகன் என இருவரையும் தேடி வருகின்றனர்.