​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரூ.20 இருந்தால் ஒருநாள் முழுவதும் அம்மா உணவகத்தில் சாப்பிடலாம்-பக்தர்களிடம் ரூ.20 வசூலிப்பதாக தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் கருத்து

Published : Sep 29, 2022 3:47 PM

ரூ.20 இருந்தால் ஒருநாள் முழுவதும் அம்மா உணவகத்தில் சாப்பிடலாம்-பக்தர்களிடம் ரூ.20 வசூலிப்பதாக தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் கருத்து

Sep 29, 2022 3:47 PM

ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு வன பகுதியில் அமைந்துள்ள கட்டழகர் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் வனத்துறையினர் 20 ரூபாய் வசூலிப்பதாகவும்,இதற்கு தடை விதிக்க கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வனப்பகுதியை சுத்தம் செய்ய தேவையான நிதியை அரசிடம் இருந்தே பெற்றுக்கொள்ளலாமே என்று கருத்து தெரிவித்தனர். மேலும், 20 ரூபாய் இருந்தால் ஒரு நாள் முழுவதும் அம்மா உணவகத்தில் உணவருந்தி விடலாம் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.