தமிழகத்தில் அக்டோபர் 2ம் தேதி ஆர்.எஸ்.எஸ், விசிக உட்பட அனைத்து அமைப்புகளின் பேரணிகளுக்கும் அனுமதி மறுக்கப்படுவதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
சட்டம் ஒழுங்கை காக்க, தற்போது இரவு பகலாக ரோந்து உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய சூழல் நிலவுவதால், எந்த அமைப்புகளின் ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்களுக்கும் அனுமதி அளிக்க இயலாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அணிவகுப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ளது. இதற்கிடையே, காவல்துறையும் சீராய்வு மனுத் தாக்கல் செய்துள்ளது.