சீன கடலோர காவல்படைக்குச் சொந்தமான 3 கப்பல்கள் தங்கள் கடல் பரப்பில் அத்துமீறி நுழைந்ததாக ஜப்பான் குற்றம்சாட்டியுள்ளது.
ஆளில்லா செங்காகூ தீவுகள் அருகே அதிகாலை 3 மணியளவில் வந்த அந்த கப்பல்கள் நன்பகல் 12 மணி வரை அங்கிருந்ததாக ஜப்பான் கடலோர காவல்படையினர் தெரிவித்தனர். சர்வதேச விதிமுறைகளை சீனா மீறியுள்ளதாக ஜப்பான் கண்டனம் தெரிவித்துள்ளது.