ஈராக்கில் குர்து இன மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஈரான் புரட்சிப் படைகள் நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர்.
50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். எர்பில், சுலைமானியா பகுதிகளில் நேற்று 10 தளங்களை குறி வைத்து ஈரான் படைகள், ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளன.
ஈரானில் மஹ்சா அமினி என்ற குர்து இன இளம்பெண் உயிரிழந்ததைக் கண்டித்து நடைபெறும் போராட்டங்களை, ஈராக்கில் இருந்தே குர்திஷ் எதிர்ப்பாளர்கள் தூண்டி விடுவதாக ஈராக் குற்றஞ்சாட்டிய நிலையில், தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதற்கு ஈராக் வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.