​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
12ஆம் வகுப்பு மாணவியை தனது மகனிடம் பேசச் சொல்லி வற்புறுத்திய ஆசிரியை பணியிட மாற்றம்..!

Published : Sep 29, 2022 12:38 PM

12ஆம் வகுப்பு மாணவியை தனது மகனிடம் பேசச் சொல்லி வற்புறுத்திய ஆசிரியை பணியிட மாற்றம்..!

Sep 29, 2022 12:38 PM

திருப்பூர் மாவட்டம் காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில், 12ம் வகுப்பு மாணவியை, தனது மகனிடம் பேசச் சொல்லி வற்புறுத்திய ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

பள்ளியில், மாணவியை மருமகள் என உறவு முறை வைத்து அழைத்த கணித ஆசிரியை சாந்தி பிரியா, தனது மகனிடம் செல்போனில் பேசுமாறு வற்புறுத்தியதோடு, பேச மறுத்த மாணவியை மதிப்பெண்களில் கை வைப்பேன் எனக் கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது.

மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், ஆசிரியை சாந்தி பிரியாவை பூலாங்கிணறு அரசு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.