திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அரசு பேருந்து உப்பாறு ஆற்று பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
உடுமலையிலிருந்து சனுப்பட்டிக்கு சென்ற அரசு பேருந்தில் பள்ளி மாணவ மாணவிகள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.
சனுப்பட்டிக்கு வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த உப்பாறு ஆற்று பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
மாணவர்களின் அழுகுரல் கேட்டு சாலையில் சென்றுகொண்டிருந்த பொதுமக்கள் பள்ளத்தில் இறங்கி அவர்களை மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அங்கு அவர்களை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.