​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
போலி காசோலை மோசடி... தொழில் அதிபர் உட்பட 3 பேரை கைது செய்த போலீசார் ..!

Published : Sep 29, 2022 8:11 AM

போலி காசோலை மோசடி... தொழில் அதிபர் உட்பட 3 பேரை கைது செய்த போலீசார் ..!

Sep 29, 2022 8:11 AM

சென்னையில், போலி காசோலையை  டெபாசிட் செய்த தொழில் அதிபர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தோல் ஏற்றுமதி தொழில் செய்து வரும் வெங்கடேஷ் தொழில் நடத்த நண்பரிடம் கடன் கேட்டுள்ளார்.

அந்த  நண்பர்  எம் கே பி நகரை சேர்ந்த மூர்த்தி, மாதவரம்  ஜெயசீலன் ஆகியோரை அறிமுகம் செய்துள்ளார் இவர்கள் கமிஷன் பெற்று கொண்டு ஹரியானாவைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவனத்தின் பெயரில் 4 கோடியே 90 லட்சம் ரூபாய்க்கான காசோலையை கொடுத்துள்ளனர்.

வெங்கடேஷ் தனியார் வங்கியில் காசோலையை டெபாசிட் செய்தபோது, சந்தேகத்தின் பேரில் வங்கி ஊழியர்கள் போலீசுக்கு புகார் கொடுத்தனர்.

தொழிலதிபர் வெங்கடேஷ் ,மூர்த்தி, ஜெயசீலன் ஆகிய 3 பேரிடம் விசாரணை நடத்தி கைது செய்த போலீசார், இந்த மோசடியில் மூளையாக  செயல்பட்ட கோவை ராஜா வை தேடி வருகின்றனர்.