விருதுநகர் மாவட்டத்தில் ஊரணியில் தூர்வாருவதாக கூறிவிட்டு கிராவல் மண் அள்ளுவதாக புகார் எழுந்துள்ளது.
அருப்புக்கோட்டை அடுத்த பரளச்சி கிராமத்திலுள்ள பெருமாள் கோவில் ஊரணியில் தூர் வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இந்நிலையில் ஊரணியிலுள்ள தண்ணீரையெல்லாம் வெளியேற்றி விட்டு மண்ணை அள்ளி கரையை பலப்படுத்தாமல் ஒரு லோடு 600 ரூபாய்க்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.