தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இராமநாதபுரம் கிராமத்தில் பால் வியாபாரிகளான அஜித்குமார் மற்றும் கார்த்திக் ஆகிய 2பேரும் கடந்த 2019 ஆம் ஆண்டு பெட்ரோல் குண்டுகளை தயாரித்து அதனை வெடிக்க செய்த வீடியோ பதிவினை சமூக வலைதளங்களில் பரப்பியதாக கூறப்படுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதையடுத்து, வீடியோ பதிவில் உள்ள அஜித்குமார் என்பவரைக் கைது செய்த சங்கரன்கோவில் தாலுகா போலீசார் கார்த்திக் என்பவரைத் தேடி வருகின்றனர்.