திண்டுகல்லில் மண் பரிசோதனைக்கு 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக அண்ணா பல்கலைக்கழக கல்லூரி உதவி பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.
பள்ளப்பட்டியை சேர்ந்த பெருமாள்சாமி என்பவர் திண்டுக்கல் மாவட்ட அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் ரமேஷ்பாண்டியனை மண் பரிசோதனை அறிக்கைக்காக அணுகிய போது 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
இந்த தொகையை ரமேஷ்பாண்டியனிடம் பெருமாள்சாமி கொடுத்த போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.