திருவள்ளூர் அடுத்த மோவூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் மாடு மேய்க்க சென்ற போது அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்கள் பாலியல் தொந்தரவு செய்த வீடியோ பதிவை காட்டி மிரட்டியதால் சிறுமி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
இது குறித்த புகாரில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் சிறுமியிடம் போலீசார் வாக்குமூலம் பெற்று அந்த 4 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் புழல் சிறையில் அடைத்தனர்