சென்னை அடுத்த ஆவடி அருகே பழுதடைந்து நின்ற லிப்டிற்குள் சிக்கிக்கொண்ட இளைஞரை தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி மீட்டனர்.
அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவரும் ராவ் என்பவர் மின்தூக்கியில் பயணம் செய்தபோது அது பாதி வழியில் பழுதடைந்து நின்றுள்ளது.
அலைபேசி மூலம் அக்கம்பக்கத்தினருக்கு அவர் அளித்த தகவலின் பேரில் அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் கதவுகளைத் திறந்து, அவர் வெளியேறுவதற்கு வசதியாக மின் தூக்கியை மேலே உயர்த்தி பத்திரமாக மீட்டனர்.