ஆப்கானிஸ்தானில் ஆளும் தாலிபான்கள், ரஷ்யாவுடன் எரிபொருள் மற்றும் கோதுமையை தள்ளுபடியில் இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
தாலிபான்கள் அரசு நாட்டு மக்களுக்கு உணவளிக்க போராடி வருகிறது. தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, கையெழுத்திட்ட மிகப் பெரிய ஒப்பந்தம் இதுவாகும்.
ஒரு மில்லியன் டன் பெட்ரோல் மற்றும் டீசல், அரை மில்லியன் டன் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு, இரண்டு மில்லியன் டன் கோதுமை ஆகியவை ஆண்டுதோறும் ரஷ்யா வழங்கும்.
எதிர்காலத்தில் ரஷ்யாவுடன் மேலும் நீண்ட கால ஒப்பந்தங்கள் செய்ய தாலிபான் அரசு ஆர்வமாக உள்ளது.