ஈராக்கில், குருது இன மக்கள் வசிக்கும் பகுதிகள் மீது ஈரான் படைகள் டிரோன்கள், ஏவுகணைகளை வீசி தாக்குதல் நிகழ்த்தின.
குர்து இன மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைமை அலுவலகங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
ஈரானில், அண்மையில் குர்து இனத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் முறையாகப் பர்தா அணியாததால் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் உயிரிழந்ததை கண்டித்து ஏராளமான போராட்டங்கள் வெடித்தன.
அண்டை நாடான ஈராக்கில் இருந்தபடி குர்து இனப் போராளி குழுக்கள் போராட்டங்களை தூண்டிவிடுவதாக ஈராக் குற்றம்சாட்டிவந்த நிலையில் இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.