அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இயான் புயல் காரணமாக பல மைல் வேகத்தில் காற்று வீசி வருகிறது.
புளோரிடாவில் உள்ள கல்லியான் மேரினா பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதுடன், தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
புயல் காரணமாக மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராததால் அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன. North Perry விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சில சிறிய விமானங்கள், தலைகுப்புற கவிழ்ந்து சேதமடைந்தன.