தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை குறித்து சோதனை செய்ய சென்ற மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் மீது, கடையின் உரிமையாளர் தாக்குதல் நடத்தியதால், அவரின் கடை மற்றும் குடோனுக்கு போலீஸ் பாதுகாப்புடன் சீல் வைக்கப்பட்டுள்ளது.
போல்பேட்டை பகுதியில் உள்ள தனியார் கடை மற்றும் குடோனில் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளதாக கிடைத்த தகவலின்படி அங்கு ஆய்வுக்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள் சுமார் 100 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.