மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே குடும்பப் பிரச்சினை காரணமாக கொள்ளிடம் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற 90 வயது மூதாட்டியை மீனவர் ஒருவர் ஆற்றில் நீந்திச்சென்று காப்பாற்றினார்.
முதலைமேடு திட்டு கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி அஞ்சலை தனது மகளுடன் வசித்துவந்த நிலையில் குடும்ப பிரச்சினையால் மனமுடைந்து கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தில் இருந்து தண்ணீரில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனைக் கண்ட அப்பகுதி மீனவர் சேகர், உடனடியாக ஆற்றில் குதித்து நீந்திச் சென்றார். அதே நேரம் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் தனஜெயன் கரையில் இருந்த படகை எடுத்துக்கொண்டு மூதாட்டியை நோக்கி விரைந்தார்.
இருவரும் மூதாட்டியை மீட்டு படகில் பாதுகாப்பாக கரைக்கு கொண்டுவந்து உறவினர்களை வரவழைத்து அனுப்பிவைத்தனர்.