கோவளம் தர்கா அருகே குளத்தை தூர்வாரிய இளைஞர் சேற்றில் சிக்கி உயிரிழப்பு
Published : Sep 28, 2022 4:30 PM
கோவளம் தர்கா அருகில் உள்ள குளத்தில் தூர்வாரும் பணியில் ஈடுபட்ட இளைஞர் சேற்றில் சிக்கி உயிரிழந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கோவளம் தர்கா அருகே 30 ஆண்டுகளாக தூர் வாரப்படாமல் சேறும், சகதியுமாக இருந்த 10 அடி ஆழ குளத்தை கோவளம் ஊராட்சி மன்றத்தலைவரின் கணவர் 4 பேரை அழைத்து வந்து தூர்வாரும் பணியில் ஈடுபடுத்தியதாக கூறப்படுகிறது.
இதில் 28வயதுள்ள இருளர் ரமேஷ் சேற்றில் இறங்கிய போது சேற்றில் நடுப்பகுதிக்க இழுத்துச் செல்லப்பட்டார்.அருகில் இருந்தவர்கள் சேற்றில் சிக்கியவரை காப்பாற்ற முடியாத நிலையில் கூச்சலிட்டு சத்தம் போட்டனர் ரமேஷ் பரிதாபமாக சுமார் 10 அடி ஆழம் உள்ள சேற்றில் முழகி பரிதாபமாக இறந்தார்.