இலவச ரேஷன் அரிசி திட்டமான கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கொரோனா காலத்தில் மக்கள் பசியால் வாடக்கூடாது என்பதற்காக இத்திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், டிசம்பர் மாதம் வரை நீட்டிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இ
தேபோல் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் வரை உயர்த்தவும், டெல்லி, அகமதாபாத், மும்பை சிஎஸ்எம்டி ரயில் நிலையங்களை 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தவும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அகவிலைப்படி உயர்வால், 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவர்.