​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பொன்னியின் செல்வனில் நந்தினி, குந்தவை அணிந்த அம்புட்டு நகையும் ஒரிஜினல்.. காதல் காட்சிகளில் நெருங்க தயக்கமாம்..!

Published : Sep 28, 2022 3:54 PM



பொன்னியின் செல்வனில் நந்தினி, குந்தவை அணிந்த அம்புட்டு நகையும் ஒரிஜினல்.. காதல் காட்சிகளில் நெருங்க தயக்கமாம்..!

Sep 28, 2022 3:54 PM

பொன்னியின் செல்வன் படத்திற்காக அசல் தங்க வைர நகைகள் பயன்படுத்தப்பட்டதாக பெரிய பளுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சரத்குமார் தெரிவித்துள்ளார்...

பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ள நடிகர் நடிகைகளுக்கு அலர்ஜி வந்துவிடக்கூடாது என்பதற்காக , நந்தினி , குந்தவை உள்ளிட்டோருக்கு படப்பிடிப்பில் அணிவிக்கப்பட்ட அணிகலன்கள் அனைத்தும் அசலான தங்க வைர நகைகள் என்று பெரிய பளுவேட்டரையர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள சரத்குமார் தெரிவித்தார்

நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ள உலக அழகி ஐஸ்வர்யாராயுடன் காதல் காட்சிகளில் இணைந்து நடிப்பதற்கு முதலில் தயங்கியதாகவும் அதன் பின்னர் இயக்குனர் மணிரத்னம் , தன்னை இயல்பு நிலைக்கு கொண்டு வந்ததாகவும் சரத்குமார் தெரிவித்தார்