திமுக தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளரை தேர்ந்தெடுக்க வரும் அக்டோபர் மாதம் 9ம் தேதி பொதுக் குழு கூடுகிறது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் தணிக்கை குழு உறுப்பினர்களுக்கான தேர்தலும் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
திமுக அரசு என்றுமே பயங்கரவாதத்திற்கு துணை போவதில்லை என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டம், பொன்னை ஆற்றின் குறுக்கே 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள உயர்மட்ட மேம்பாலத்திற்கு துரைமுருகன் அடிக்கல் நாட்டினார்.
பின் மேடையில் பேசிய துரைமுருகன், குடும்பத் தலைவிகளுக்கு 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்திற்காக சில்லரை மாற்றிக் கொண்டிருப்பதாக நகைச்சுவையுடன் தெரிவித்தார்.