​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
துருக்கியில் சுமார் 12,000 ஆண்டுகள் பழமையான அடுக்குமாடி கட்டிடம் கண்டுபிடிப்பு..!

Published : Sep 28, 2022 3:18 PM

துருக்கியில் சுமார் 12,000 ஆண்டுகள் பழமையான அடுக்குமாடி கட்டிடம் கண்டுபிடிப்பு..!

Sep 28, 2022 3:18 PM

துருக்கியில், 12,000 ஆண்டுகள் பழமையான அடுக்குமாடி கட்டிடத்தை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சுமேரியர்கள், அசிரியர்கள், ரோமானியர்கள் உள்பட சுமார் 25 நாகரிகங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வந்ததாகக் கூறப்படும் பொங்குளு டர்லா (Boncuklu Tarla) என்ற தொல்லியல் தளத்தில் 10 ஆண்டுகளாக அகழ்வாய்வு பணிகள் நடைபெற்றுவருகின்றன.

வீடுகள், அரசு கட்டிடங்கள், கோயில்கள், 130 மனித எலும்புக்கூடுகள், ஒரு லட்சம் பாசி மணிகள் அங்கு கிடைத்துள்ள நிலையில் தற்போது இந்த அடுக்குமாடி பொது கட்டிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.