ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாலேயே ஏ.ஆர்.ரகுமானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி. ஆணையர் தெரிவித்துள்ளார்.
6.79 கோடி ரூபாய் வரி மற்றும் 6.79 கோடி ரூபாய் அபராதம் செலுத்தக் கோரி அனுப்பிய நோட்டீசை எதிர்த்து, ஏஆர் ரகுமான் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது.
ஜி.எஸ்.டி. ஆணையர் சார்பில், ஏ.ஆர்.ரகுமான் புகழை களங்கப்படுத்தும் நோக்கம் இல்லை என்றும், ஜி.எஸ்.டி. துறையிலேயே மேல்முறையீடு செய்து தீர்வை பெறாமல் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டது. இதையடுத்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.