ஆந்திர கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இன்று வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களிலும் நாளை செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளது.
சென்னையின் ஒரு சில பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், வட தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தியுள்ளது.