பிக் பாஸ் 16 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆயிரம் கோடி ரூபாய் சம்பளம் வாங்கியிருப்பதாக வெளியான தகவலை இந்தி நடிகர் சல்மான் கான் மறுத்துள்ளார்.
பிக்பாஸ்-16 நிகழ்ச்சிக்கான கண்டஸ்டன்ட் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், ஆயிரம் கோடி ரூபாய் வாங்கியிருப்பதாக வெளியான தகவலை வதந்தி என மறுத்தார்.
அவ்வளவு பெரியத் தொகை தாம் வாங்கியிருந்தால், வாழ்நாளுக்கும் தாம் நடிக்க வேண்டியதில்லை என குறிப்பிட்ட சல்மான் கான், 1,000 கோடி ரூபாயை தாம் வாங்கியிருந்தால், வருமான வரித்துறை, அமலாக்கத்துறைக்கு தெரிந்திருக்கும், தனக்கு அந்த அமைப்புகள் நோட்டீஸ் அனுப்பியிருக்குமென கூறினார்.