உத்திரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில், தனியார் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
இதில் படுகாயமடைந்த 12 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.