​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாலம் கட்டுமான பணியில் முறைகேடு.. ஊராட்சி தலைவரை மிரட்டும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி..!

Published : Sep 28, 2022 1:04 PM



பாலம் கட்டுமான பணியில் முறைகேடு.. ஊராட்சி தலைவரை மிரட்டும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி..!

Sep 28, 2022 1:04 PM

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் குறுக்குசாலையில் இருந்து கோட்டூர் செல்லும் வழியில் அமைந்துள்ள முள்ளூர் கிராமத்தில் தரமற்ற முறையில் பாலம் மற்றும் சாலைப்பணிகள் போடப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

பாலத்தின் மீது போடப்பட்ட தார் சாலை கையினால் பெயர்த்து எடுத்தால் பூந்தி போல உதிர்ந்து வரும்வகையில் தரமற்ற முறையில் போடப்பட்டிருப்பதாக ஆதங்கம் தெரிவித்தனர்.

சாலையின் இரு பக்கமும் சரல் மண் போடப்படாமல் கரிசல் மண்ணை கொட்டி இருப்பதால் மழைக்காலங்களில் விபத்துக்கள் ஏற்படும் அபாயமான சூழல் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர்.

இந்த பாலம் மர்றும் சாலை பணிகளை கண்காணிக்கும் பொறுப்பில் உள்ள நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் மோகனா என்பவர் சம்பவ இடத்திற்கு வந்தும் இறங்கி பர்க்காமல் உயர் அதிகாரிக்கு ரெயில் டிக்கட் போடவேண்டும் என்று கூறி சென்று விட்டதாகவும், அவரை சொல்போனில் தொடர்பு கொண்ட நிலையில் மோகனா ஏகவசனத்தில் பேசி மிரட்டியதாகவும் முள்ளூர் ஊராட்சி தலைவர் ராமசாமி குற்றஞ்சாட்டினார்

ஒரு கட்டத்தில் தன்னை ஒரு முரட்டு அதிகாரியாக காட்டிக் கொண்ட மோகனா இந்த கூறுகூட இல்லை என்று பேசி இணைப்பை துண்டித்தார்

இதனை விரைந்து சரி செய்து கொடுக்காவிட்டால் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளனர்