​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரிவாளை காட்டி பெட்ரோல் பங்கில் கொள்ளை முயற்சி..!

Published : Sep 28, 2022 12:53 PM

அரிவாளை காட்டி பெட்ரோல் பங்கில் கொள்ளை முயற்சி..!

Sep 28, 2022 12:53 PM

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள பெட்ரோல் பங்கில்  ஒருவர் அரிவாளை காட்டி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

  மண்டபசாலை பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கிற்கு நேற்றிரவு, இருவர்  இருசக்கர வாகனத்தில் சென்றனர். 

ஒருவர் வெளியே வாகனத்தில் புறப்பட தயாராக இருந்த நிலையில்,  அரிவாளுடன் உள்ளே சென்ற மற்றொருவர் ஊழியர்களிடம் அரிவாளை காட்டி கொள்ளையில் ஈடுபட முயன்றார். 

ஊழியர்கள் அவர் மீது  கட்டிலை வீசி எறிந்ததும், அந்த நபர் இருசக்கர வாகனத்தில் தயாராக இருந்த மற்றொரு நபருடன் தப்பினார்.