தாம்பரம் அருகே காட்டில் பதுங்கி இருந்த பிரபல ரவுடி சச்சினை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
ரவுடி சச்சின் மீது 2 கொலை வழக்குகள் உட்பட பல வழக்குகள் உள்ள நிலையில் சச்சின் தலைமறைவாக இருந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் நடுவீரப்பட்டு காட்டுப் பகுதியில் சச்சின் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் படி அங்கு சென்று போலீசார் பிடிக்க முயன்ற போது, ரவுடி சச்சின், காவலர் பாஸ்கரனை கத்தியால் இடது பக்க தோளில் வெட்டியுள்ளார்.
இதனால் சோமங்கலம் ஆய்வாளர் சிவக்குமார் தற்காப்புக்காக ரவுடி சச்சினை வலது கால் முட்டியின் மீது துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளார்.
காயமடைந்த ரவுடி சச்சினும், காவலர் பாஸ்கரனும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.