விவசாய நிலத்தில் உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, நிலத்தின் உரிமையாளர் குடும்பத்தினர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சேவக்கானப் பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி எல்லா ரெட்டி. இவர்களுடைய விவசாய நிலத்தில் உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்கும் பணிக்காக பொக்லைன் மூலம் மின்வாரிய அதிகாரிகள் குழி தோண்டியுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குடும்பத்தினர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதன்பேரில் தற்காலிமாக பணிகள் நிறுத்தப்பட்டன