தமிழகத்தில் மண்ணெண்ணை பாட்டில் வீச்சு மற்றும் கல்வீச்சு தொடர்பான மேலும் 4 வழக்குகளில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு சொந்தமான இடங்களில் கடந்த 22ஆம் தேதி என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதை கண்டித்து பாஜக, ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் வீடு, அலுவலகங்களில் மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில் வீசி தாக்கியது தொடர்பாக தமிழகம் முழுவதும் மொத்தம் 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
அதில் 11 வழக்குகளில் 14 நபர்களை கைது செய்திருந்த நிலையில், மேலும் 4 வழக்குகளில் 9 நபர்களை கைது செய்துள்ளதாக தமிழக காவல்துறை கூறியுள்ளது.