​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ராணுவ தளவாட கொள்முதலில் தேச நலனே முக்கியம் - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ..!

Published : Sep 28, 2022 6:18 AM



ராணுவ தளவாட கொள்முதலில் தேச நலனே முக்கியம் - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ..!

Sep 28, 2022 6:18 AM

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 4 நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். 

வாஷிங்டனில் அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின் மற்றும் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோரை தனித் தனியாக சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.

இரு நாடுகள் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு, தகவல் பகிர்வு, தளவாட ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து இந்த ஆலோசனையின் போது விவாதிக்கப்பட்டது. 

in பின்னர் ஜெய்சங்கரும், ஆண்டனி பிளிங்கனும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஜெய்சங்கர், ராணுவ தளவாட கொள்முதலில் தேச நலனே தங்களுக்கு முக்கியம் என்றார்.

கடந்த 15 ஆண்டுகளில், இந்தியா அமெரிக்காவிடமிருந்து நிறைய ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்துள்ளது என்றும் கூறினார். இந்தியர்களின் விசா விண்ணப்பங்கள் அதிக நாட்கள் தேக்கமடையும் பிரச்சனைக்கு விரைவில் அமெரிக்கா தீர்வு காணும் என்றும் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

பின்னர் பேசிய பிளிங்கன், பருவநிலை மாற்றத் துறையில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றி வருவதாக கூறினார்.

குவாட் மற்றும் ஜி20 அமைப்புகளில் இணைந்து பணியாற்றுவதன் மூலம் இரு நாடுகள் இடையேயான உறவுகள் உண்மையான முன்னேற்றத்தை அடைந்துள்ளன என்றும் தெரிவித்தார்.