தெற்கு டெல்லியில் குடியிருப்பு வளாகம் ஒன்றில் இருந்து இருசக்கர வாகனத்தை வேகமாக திருடிச்சென்றவர்கள், சரியான நேரத்தில் காவலாளி கேட்டை மூடியதால் தடுமாறி கீழே விழுந்து பிடிபட்டனர்.
அங்குள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் பஞ்சாயத்து அதிகாரிகள் என கூறி 2 நபர்கள் உள்ளே நுழைந்தனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த கொரியர் ஊழியர் ஒருவரின் இருசக்கர வாகனத்தை திருடிக்கொண்டு அவர்கள் தப்பியோட முயற்சித்தனர்.
ஆனால், கொரியர்காரரின் குரலை கேட்டு உஷாரடைந்த காவலாளி உடனடியாக கேட்டை மூடவே, திருடர்கள் 2 பேரும் கேட்டின் மீது மோதி கீழே விழுந்தனர். ஒருநபர் கேட்டின் அருகிலும் மற்றொரு நபர் அருகிலுள்ள பூங்காவிலும் பிடிபட்டனர்.