உத்தரப்பிரதேச மாநிலத்தில் தாஜ்பூர் என்ற கிராமத்தில் பொதுமக்களை ஏமாற்றி பணம் வசூலிக்கும் நோக்கத்துடன் சமாதிநிலையை அடைய போவதாக கூறி 6 அடி ஆழ பள்ளத்தில் இறங்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.
நவராத்திரி பண்டிக்கையை முன்னிட்டு வரும் பக்தர்களிடம் பணம் வசூலிப்பதற்காக அந்த நபர் இந்த சமாதி நாடகத்தை அரங்கேற்றியதாக கூறப்படுகிறது.
தற்போது குழிக்குள் இறங்கிய நபரையும், சம்பந்தப்பட்ட மூன்று சாமியார்களையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.