உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வில் விசாரிக்கப்பட்ட வழக்குகள் முதன்முறையாக இன்று நேரலையாக ஒளிபரப்பப்பட்டன.
தேசிய மற்றும் அரசியல் சாசன முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளின் விசாரணை இன்று முதல் உச்ச நீதிமன்றத்தில் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி முதன்முறையாக அரசியல் சாசன அமர்வின் விசாரணை இன்று நேரலை செய்யப்பட்டது.
முதல் வழக்காக உயர் வகுப்பு பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேரலையில் இன்று விசாரிக்கப்பட்டது.
இது தவிர, மகாராஷ்டிராவில் ஷிண்டே மற்றும் உத்தவ் தாக்கரே சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளின் விசாரணையும் இன்று நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டன.