PFI இயக்கம் தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வரும் சோதனையில், சுமார் 250 பேர் பாதுகாப்பு அமைப்புகளின் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு முதல் சோதனை நடைபெற்று வரும் நிலையில், அதிகபட்சமாக கர்நாடகாவில் 80 பேரும், உத்தரபிரதேசத்தில் 57 பேரும், மகாராஷ்டிராவில் 40 பேர் என 8 மாநிலங்களில் சுமார் 250 பேர் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் சோதனையில் கர்நாடகாவில் முக்கிய ஆவணங்களும், டெல்லியில் 30 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.