உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை சுற்றி 500 மீட்டர் சுற்றளவில் எந்தவித வர்த்தக நடவடிக்கைகளையும் மேற்கொள்ள கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு மாறாக தாஜ்மகாலை சுற்றியுள்ள பகுதிகளில் சட்ட விரோத வர்த்தகங்கள் நடைபெறுவதாகவும், அதனை தடுக்க ஆக்ரா வளர்ச்சி கழகத்திற்கு உத்தரவிட கோரியும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், தாஜ்மகாலின் வெளிச்சுவர் மற்றும் எல்லைப்பகுதியில் இருந்து 500 மீட்டர் சுற்றளவுக்கு அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் உடனடியாக நீக்க வேண்டும் என ஆக்ரா வளர்ச்சி கழகத்திற்கு உத்தரவிட்டது.