ஃபிரீ ஃபையர் விளையாட்டில் ரத்தம் தெறிப்பது போல் உள்ள காட்சிகள் குழந்தைகளிடம் வன்முறையை தூண்டும் விதமாக அமைந்துள்ளதாக உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது.
ஃபிரீ ஃபையர் விளையாட்டில் மூழ்கி நண்பர்களுடன் சென்ற மகளை கண்டுபிடித்து தர கோரிய பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர். அதன் விசாரணையில், ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தாலும் மீண்டும் வேறு பெயர்களில் அவை வருவதாகவும், இதனை முழுவதும் தடை செய்வது இயலாத காரியமாக உள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
தற்போது பெற்றோர்கள், குழந்தைகள் அனைவரும் மொபைலில் மூழ்கி ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்வதே இல்லை என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.