சென்னை துறைமுகத்திலிருந்து, ஆந்திராவுக்கு இயந்திர உதிரிபாகங்களை ஏற்றிச்சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று ஊத்துக்கோட்டை அருகே கிருஷ்ணா நதி கால்வாயில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கிருஷ்ணா கால்வாய் பாலத்தை நெருங்கிய போது, எதிரே வேகமாக வந்த வேன் ஒன்றுக்கு வழிவிட விலகியபோது, எதிர்பாராத விதமாக கால்வாய்க்குள் கவிழ்ந்தது.