​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தூக்கி நிறுத்தப்பட்ட இரும்புக் கம்பிகள் ,கிரேனுடன் பேருந்தின் மீது விழுந்ததில் 3 பேர் படுகாயம்..!

Published : Sep 27, 2022 1:16 PM



தூக்கி நிறுத்தப்பட்ட இரும்புக் கம்பிகள் ,கிரேனுடன் பேருந்தின் மீது விழுந்ததில் 3 பேர் படுகாயம்..!

Sep 27, 2022 1:16 PM

சென்னை ராமாபுரம் அருகே, மெட்ரோ ரயில் பணிக்காக தூக்கி நிறுத்தப்பட்ட இரும்பு கம்பிகள், கிரேனுடன் அரசு பேருந்தின் மீது விழுந்ததில் 3 பேர் படுகாயமடைந்தனர்.

ராமாபுரத்தில் மெட்ரோ ரயிலுக்காக ராட்சத தூண் அமைக்கும் பணி நடைபெறுகிறது.

இன்று அதிகாலை சுமார் 30 அடி நீளத்திற்கு கட்டப்பட்ட கம்பிகளை கிரேன் மூலம், தூக்கி நிறுத்தும் போது, எதிர் பாராத விதமாக கிரேன் சாய்ந்து, அவ்வழியாக போக்குவரத்து கழக ஊழியர்களை ஏற்றிச் சென்ற அரசு பேருந்தின் மீது விழுந்தது.

இதில் ஓட்டுநர்கள் அய்யாதுரை, பூபாலன் மற்றும் கண்டெய்னர் லாரி டிரைவர் ரஞ்சித் குமார் ஆகியோர் காயமடைந்த நிலையில், விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.