200 கோடி ரூபாய் பண மோசடி வழக்கு தொடர்பான விசாரணையின் ஒருபகுதியாக, சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகரை சந்தித்து பேசிய நடிகைகள் நிக்கி தம்போலி மற்றும் சோபியா சிங் ஆகியோர் டெல்லி திகார் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
சிறையில் சுகேஷ் சந்திரசேகரை, நடிகைகள் சந்தித்து பேசுவது போன்ற சந்திப்பை மீண்டும் உருவாக்கி அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுகேஷ் சந்திரசேகருடனான நடிகைகளின் சந்திப்பு முழுவதும் பதிவு செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.