கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் பெண்ணை தாக்க முயன்றதுடன், செல்போனை பறிக்க முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
நடுவூர்கரை பகுதியை சேர்ந்த ஐய்யாதுரை அரசின் அனுமதியின்றி கோயில் கட்ட முயற்சிப்பதாக, அவரின் பக்கத்து வீட்டை சேர்ந்த லில்லி ஜனட் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் , அப்பெண்னின் வீட்டிற்கு விசாரணைக்கு சென்ற போது, லில்லி ஜனட் தனது செல்போன் மூலம், கணவர் ஞானதாஸுக்கு தகவல் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த காவல் உதவி ஆய்வாளர் முரளிதரன் அப்பெண்ணிடமிருந்து செல்போனை பறிக்க முயன்றதுடன் அவரை தாக்க முயன்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.