திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக, முன்னாள் எம்.எல்.ஏ எம்.கே பாலன் கொலை வழக்கில் சிக்கிய இருவரிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தினர்.
கடந்த 2000ம் ஆண்டு மயிலாப்பூர் எம்.எல்.ஏவாக இருந்த எம்.கே பாலன் நடைபயிற்சி சென்ற போது 16 பேர் கொண்ட கும்பலால் கடத்தி கொலை செய்யப்பட்டார்.
அதே பாணியில் கடந்த 2012ம் ஆண்டு, ராமஜெயமும் நடைபயிற்சி சென்ற போது கடத்திக் கொலை செய்யப்பட்டார்.
எனவே, எம்.கே பாலன் கொலை வழக்கில் தொடர்புடைய கணேசன் மற்றும் செந்தில் ஆகியோர், ராமஜெயத்தை கடத்திக் கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் டி.எஸ்.பி மதன் விசாரணை மேற்கொண்டார்.