திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மினி சரக்கு வாகனத்திற்கு தீ வைத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கொழுமம் கொண்டான் ஊராட்சியை சேர்ந்த கேசவன் தனது வாகனத்தில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார்.
இன்று அதிகாலை அவரின் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.
இது தொடர்பாக கேசவன் அளித்த புகாரின் பேரில், தொழில் போட்டி காரணமாக வாகனத்திற்கு தீ வைத்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார், அப்பகுதியை சேர்ந்த வியாபாரிகள் சிலரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.