கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் துறைமுகத்தில் மீன் பாரம் ஏற்றிச்சென்ற டாடா ஏஸ் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்தது.
விசைப்படகிலிருந்து மீன்களை இறக்கி ஏலக்கூடத்திற்கு ஏற்றிச்செல்லும் வழியில் டாடா ஏஸ் வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் உருண்டோடியது.
சுதாரித்துக்கொண்ட ஓட்டுனர் வாகனத்திலிருந்து வெளியே குதித்து உயிர்தப்பிய நிலையில், டாடா ஏஸ் வாகனம் முழுவதுமாக கடலில் மூழ்கியது.
இதனையடுத்து அங்கிருந்த மீனவர்கள் உதவியுடன் கயிறுகட்டி கிரேன் மூலம் டாடா ஏஸ் வாகனம் மீட்கப்பட்டது.