​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சீமைக் கருவேல மரங்களை அடியோடு அகற்ற வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்

Published : Sep 27, 2022 6:30 AM

சீமைக் கருவேல மரங்களை அடியோடு அகற்ற வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்

Sep 27, 2022 6:30 AM

சீமை கருவேல மரங்களை அகற்றுமாறு அனைத்து பஞ்சாயத்துகளுக்கும் அறிவுறுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு விசாரணையின்போது, முதுமலை, ஆனைமலை வனப்பகுதிகளில் 200 ஹெக்டேர் பரப்பில் மரங்கள் அகற்றப்பட்டதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் உள்ள ஒரு லட்சத்து 93 ஆயிரம் ஹெக்டேர் பரப்பு சீமைக் கருவேல மரங்களில் 70 ஆயிரத்து 294 ஹெக்டேர் அளவுக்கு அகற்றப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

கிராமப்புறங்களில் 2ஆயிரத்து 700 ஹெக்டேர் பரப்பில் இருந்த சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டதாக ஊரக வளர்ச்சித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்த நீதிபதிகள், சீமைக் கருவேல மரங்களை அகற்றிய பின் அந்த இடங்களில் நாட்டு மரங்களை நடுமாறு உத்தரவிட்டனர்.