வாய்தா திரைப்பட நடிகை பவுலினின் காதலர் சிராஜுதினிடம் 3 மணி நேரத்திற்கு மேல் நடந்த விசாரணையில், தான் நடிகையை காதலிக்கவில்லை என சிராஜுதின் மறுப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் கடந்த 17ஆம் தேதியன்று பவுலின் தற்கொலை செய்த நிலையில், சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவரது காதலர் சிராஜுதினிடம் மேற்கொண்ட விசாரணையில், பவுலினை 5 மாதமாக தான் தெரியும் என்றும், அவர் தான் தன்னை ஒரு தலையாக காதலித்தார் என்றும் சிராஜுதின் கூறியதாக போலீசார் கூறியுள்ளனர்.
மேலும், பவுலினின் ஐபோன் குறித்த கேள்விகளுக்கு அவர் மழுப்பலாகவே பதிலளித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.