சென்னை வண்ணாரபேட்டையில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வன்கொடுமை செய்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் 6 உறவுக்கார பெண்கள் உள்ளிட்ட 8 பேருக்கு ஆயுள் தண்டனையும், போலீஸ் இன்ஸ்பெக்டர், அரசு அதிகாரி, பத்திரிகையாளர் உள்ளிட்ட 13 பேருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதுதொடர்பாக எண்ணூர் காவல் ஆய்வாளர் புகழேந்தி, தமிழக அரசின் உணவு பொருள்கள் வழங்கள் துறை அதிகாரி கண்ணன், தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வினோபாஜி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன் உள்ளிட்ட 26 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதில் 4 பேர் தலைமறைவான நிலையில், 22 பேர் கைது செய்யப்பட்டனர். மாரீஸ்வரன் என்பவர் விசாரணை காலத்தில் இறந்துவிட்டதால், எஞ்சிய 21 பேரையும் குற்றவாளிகளாக அறிவித்த நீதிமன்றம் தண்டனை விவரத்தை இன்று அறிவிதித்தது.